Posts

Showing posts from June, 2020

ஊழ்...

இன்னும் ஒருமுறையேனும் மறக்கவும் மன்னிக்கவும் முயற்சித்திருக்கலாம் இல்லிக்குடமாய் மனம் இருந்திருந்தால்… ஒட்டுப் போட்ட ஞாபகங்கள் கூட ஒட்டிக் கொண்டு சாக்காடு வரை வந்து சேரும் சாத்தியங்கள் இருக்கும் போது… மறத்தலில் மன்னிப்பையும் மன்னிப்பில் மறத்தலையும் ஒலித்துக்கொள்ள சந்தர்ப்பங்கள் ஏது? மரணங்களுக்கப்பால் ஒரு வேளை மறக்கலாம்… மன்னிக்கலாம்… இல்லாமலும் போகலாம்…   -     சல்மா தினேசுவரி   Salma Dhineswary

மனிதமும் மதம் பிடித்த ஓலமும்...

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”      இறப்பு தூக்கம் வருதலை போன்றதாகவும் பிறப்பு உறக்கம் நீங்கி விழிப்பதைப் போன்றதாகவும் என்ற உண்மை உணரப் பட்டாலும் அந்திமக்காலத்தை நோக்கி போகும் உயிருக்கு விடை கொடுக்கும் பக்குவம் இன்னும் முழுமையாக இல்லை நமக்கு.      என்ன தான் இறப்பும் பிறப்பும் பிணைந்திருந்தாலும் பிறப்பை யாசிக்கும் அளவிற்கு இறப்பை யாசிக்க நான் இன்னும் பழக்கப்படவில்லை..பழகிக்கொள்ளவும் இல்லை. ஒரு முடிவாகிப் போகும் மரணம் மீண்டும் நினைவலைகளில் மட்டுமே உயிர்பித்து சில நொடிகளில் மீண்டும் நிழலாகிப் போகும் சாத்தியமே உண்டு. அதனால் தான் மறதியை இறைவன் வைத்தான் போலும் ஒவ்வொரு மனிதத்திலும்..      ஆனால் முடிவாகி போன மரணம் ஒரு பிரளயத்தை உற்பத்தி செய்து தினம் தினம் செத்து பிழைக்கும் ஏற்பாடு செய்து கலாச்சார  வேலியைத் தாண்ட இயலாது முடமாக்கிப் போட்டு, இருத்தலையும் மறதியையும் அழித்து விட்டுப் போன கதைத் தெரியுமா உங்களுக்கு...?..இதோ அந்த மனிதனின் ஓலம்.....   அன்று இருண்ட காலம் போலும்... ஏதோ ஒரு வலி ...

பிறப்பற்ற பிறப்பு

பிறப்பற்ற பிறப்பு July 1, 2015   சுகத்திற்கு மட்டுமே கட்டில்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தூங்கம் தூக்கு கயிறுகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன வயிற்றை நிறைத்துக் கொண்டது போல் மனத்தை  நிறைத்துக் கொள்ள வழியில்லை அன்பு ததும்பிய நான்கறையும் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன இப்போதுதான் துடிக்கிறது என்னுள் இன்னொரு இருதயம் . கண்ணீரை நிரப்பிக் கொண்டு சிரித்து மழுப்புகிறேன் சிரிப்பொலியின் சீற்றத்தில் நானே சாகிறேன் அசைவுகளில் நான் அசைவற்று போகிறேன் தினம் தினம் … இனிமையாய் இனித்திட வேண்டிய தருணங்கள் இயலாமையை மட்டுமே இருத்தி செல்கின்றன வாழ்வைக் கொத்தித் தின்னும் கழுகுகள் உள்ளவரை உண்மை கடை விரித்தும் பயனில்லை கொலை செய்யும் வழுவில்லை எனக்கு பிறந்து விடு வாழ்ந்து தொலைவோம் இருவருமாக http://vallinam.com.my/version2/?p=2176