“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” இறப்பு தூக்கம் வருதலை போன்றதாகவும் பிறப்பு உறக்கம் நீங்கி விழிப்பதைப் போன்றதாகவும் என்ற உண்மை உணரப் பட்டாலும் அந்திமக்காலத்தை நோக்கி போகும் உயிருக்கு விடை கொடுக்கும் பக்குவம் இன்னும் முழுமையாக இல்லை நமக்கு. என்ன தான் இறப்பும் பிறப்பும் பிணைந்திருந்தாலும் பிறப்பை யாசிக்கும் அளவிற்கு இறப்பை யாசிக்க நான் இன்னும் பழக்கப்படவில்லை..பழகிக்கொள்ளவும் இல்லை. ஒரு முடிவாகிப் போகும் மரணம் மீண்டும் நினைவலைகளில் மட்டுமே உயிர்பித்து சில நொடிகளில் மீண்டும் நிழலாகிப் போகும் சாத்தியமே உண்டு. அதனால் தான் மறதியை இறைவன் வைத்தான் போலும் ஒவ்வொரு மனிதத்திலும்.. ஆனால் முடிவாகி போன மரணம் ஒரு பிரளயத்தை உற்பத்தி செய்து தினம் தினம் செத்து பிழைக்கும் ஏற்பாடு செய்து கலாச்சார வேலியைத் தாண்ட இயலாது முடமாக்கிப் போட்டு, இருத்தலையும் மறதியையும் அழித்து விட்டுப் போன கதைத் தெரியுமா உங்களுக்கு...?..இதோ அந்த மனிதனின் ஓலம்..... அன்று இருண்ட காலம் போலும்... ஏதோ ஒரு வலி ...