இருட்டுக்குள் தீப்பிளம்பு
என் உள்மன நெருடல்களில்
உன்னை நோக்கிய பயணங்கள்
தொடங்கின இருட்டுக்கு
அப்பால்...
இருட்டு விழுங்கப்பட்டு
மீண்டும் உயிர் பெற்றுக்கொண்டது
நடக்க நடக்க மேலெழுந்த
தீப்பிளம்பில்…
நிரம்பியும் வழியாத உணர்வுகளுக்கு மத்தியில்
முடிவில்லாத பயணத்தில்
இருட்டோடும் தீப்பிளம்போடும்
இன்னும் நடந்து கொண்டிருக்கிறேன்
நான்...
-
சல்மா
தினேசுவரி (Salma Dhineswary)

Comments
Post a Comment