பிறப்பற்ற பிறப்பு
- Get link
- X
- Other Apps
பிறப்பற்ற பிறப்பு
சுகத்திற்கு மட்டுமே கட்டில்கள்
ஒதுக்கப்பட்ட பிறகு
தூங்கம் தூக்கு கயிறுகளில்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
வயிற்றை நிறைத்துக் கொண்டது
போல் மனத்தை நிறைத்துக் கொள்ள வழியில்லை
அன்பு ததும்பிய நான்கறையும் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன
இப்போதுதான்
துடிக்கிறது என்னுள் இன்னொரு
இருதயம் .
கண்ணீரை நிரப்பிக் கொண்டு
சிரித்து மழுப்புகிறேன்
சிரிப்பொலியின் சீற்றத்தில் நானே
சாகிறேன்
அசைவுகளில் நான் அசைவற்று
போகிறேன் தினம் தினம் …
இனிமையாய் இனித்திட வேண்டிய தருணங்கள் இயலாமையை மட்டுமே இருத்தி செல்கின்றன
வாழ்வைக் கொத்தித் தின்னும்
கழுகுகள் உள்ளவரை உண்மை கடை விரித்தும் பயனில்லை
கொலை செய்யும் வழுவில்லை எனக்கு
பிறந்து விடு வாழ்ந்து தொலைவோம்
இருவருமாக
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment